Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. நாளை பாஜக முக்கிய ஆலோசனை….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சனிக்கிழமையும் ( ஜன.29) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை சென்னை அலுவலகத்தில் கட்சியினர் ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் வேட்பாளர்கள் தேர்வு, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |