Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( ஜன.28) ‘கரண்ட் கட்’ செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை :-

பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பல்லாவரம் பகுதி :-

ஜி.எஸ்.டி ரோடு, இந்திரா காந்தி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, சென்னை சில்க்ஸ் ஏ2பி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் / திருவேற்காடு பகுதி :-

பொன்னியம்மன் நகர், ராஜன்குப்பம், வி.ஜி,என் மகாலட்சுமி நகர், மெட்ரோ சிட்டி, அக்ரகாரம் டி.ஐ சைக்கிள் பகுதி விஜயலட்சுமிபுரம், வெங்கடாபுரம், சோழாபுரம் சாலை, அம்பத்தூர் இரயில் நிலையம், அம்பத்தூர் மார்கெட், எம்.டி.எச் சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

இராமநாதபுரம் மாவட்டம் :-

கடலாடி துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓரிவயல் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் சவேரியார் சமுத்திரம், மேலச்சிறுபோது, கீழச்சிறு போது, எஸ்.குளம், கருமல், குமார குறிச்சி, மீனங்குடி, கண்டிலான், மாரந்தை, சவேரியார் பட்டினம், ஓரிவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் :-

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சேத்தூர் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமி புரம், கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர் பட்டி, கொங்கன் குளம், காக்கிவாடன் பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, கரிசல்குளம், கொம்பன்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்கலம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நெல்லை மாவட்டம் :-

பாளை துணை மின் நிலையத்தில் நாளை (29-ந் தேதி) மாதாந்திர பராமரப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்க நல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக்திரையங்கு பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச் செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலை கொழுந்துபுரம், மணப் படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், மகா ராஜநகர், தியாகராஜநகர், ராஜ கோபாலபுரம், சிவந்தி பட்டி, அன்புநகர் மற்றும் முருகன் குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் 29-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்மை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர் புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக் கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரி யாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ்ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத்தெரு, பி.எஸ்.என்.கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ.காலனி), பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ்நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம் மாள்புரம், கொங்கந் தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச் செல்வி ஆகிய பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது.

மதுரை மாவட்டம் :-

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:-

மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணா நகர், சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புலபாய் தேசாய் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோடு, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி.ரோடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருங்கால வைப்பு நிதி குடியிருப்பு, ஏ.ஐ.ஆர்., குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ.காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை மெயின் ரோடு, கஸ்டம்ஸ் காலனி, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் குடியிருப்பு, கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர் கோவில் ரோடு, டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர் 1 – 4 தெருக்கள், எச்.ஏ.கான் ரோடு, கமலா 1,2 தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மகால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம், மூக்கப்பிள்ளை தெரு, ஆர்.எஸ்.என்.மெயின் ரோடு, உழவர் சந்தை பகுதி, கிருஷ்ணாபுரம் காலனி, விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம், பூக்கடை, பழைய நத்தம் ரோடு, ஏ.ஐ.ஆர். பிள்ளையார் கோயில், ஆத்திகுளம், நாராயணபுரம், பேங்க் காலனி, கங்கை தெரு, குறிஞ்சி நகர், குடிசை மாற்று வாரியம், பலாமி குடியிருப்பு பகுதிகள்.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை :-

கீழையூர், கீழவளவு, செமினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியா மங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர், தர்மதானபட்டி ஆகிய பகுதியில் மின் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |