Categories
மாநில செய்திகள்

OMG : JUST MISS…. வனத்துறையினரை பாய்ந்து தாக்கிய புலி…. பதற வைக்கும் வீடியோ….!!!!

திருப்பூர் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை புலி ஒன்று பொதுமக்களை தாக்கி வந்தது. அதில் 7 பேர் பயங்கர காயம் அடைந்துள்ளனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிறுத்தை புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் நேற்று சிறுத்தை பிடிப்பட்டது.

மயக்க ஊசியை போட்டு புலியை வலை வீசி வனத்துறையினர் பிடித்தனர். இதற்கிடையே புலியை பிடிக்கும் முயற்சியில் தன்னுயிரை பணயம் வைத்து வனத்துறையினர் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் உயிரை காத்த உன்னத பணியாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |