மத்திய அரசு அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதிலிருந்தே ஊழியர்களுக்கான சம்பள உயர்வை மாநில அரசுகளும் அறிவித்து வருகிறது. அதன்படி இமாசல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மாநில அரசு 3 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இமாசல பிரதேச அரசு மத்திய அரசின் ஆணையை தொடர்ந்து அகவிலைப்படியை 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மேலும் முதல்வர் ஜெயராம் தாகூர் தலைமையிலான அரசு இந்த சம்பள உயர்வை அறிவித்துள்ளது. ஜனவரி 25-ஆம் தேதி வெளியான இந்த சம்பள உயர்வு அறிவிப்பால் அரசுக்கு ரூ.6,000 கோடி செலவாகும் என்றும், சுமார் 2.2 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பஞ்சாப் மாநிலத்தை போலவே இந்த மாநிலத்திலும் பென்சன் 1.75 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் ரூ.2,000 கோடி அரசுக்கு செலவாகும் என்று முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.