Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மிக முக்கிய உத்தரவு…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

சென்னையில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த முறை வாக்காளர் பட்டியலில் 10.17 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 28 ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற கோரி இளநிலை பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |