Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி…. குற்றவாளி சிக்கியது எப்படி…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு 16-ஆவது அவென்யூவில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். அப்போது ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக ஏ.டி.எம் மையத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து காவல்துறையினர் வருவதை பார்த்ததும் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒப்பந்த துப்புரவு பணியாளரான ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் 5 லட்ச ரூபாய் கடனை அடைப்பதற்காக ரஞ்சித் குமார் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் துப்புரவு பணி வாகனத்தில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால் அந்த வாகனத்தை அடையாளமாக வைத்து காவல்துறையினர் ரஞ்சித்குமாரை பிடித்துள்ளனர்.

Categories

Tech |