தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கல்லூரிகளில் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைனில் தேர்வு நடைபெறும். பிப்ரவரி 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் 1, 3 மற்றும் 5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் செய்முறை தேர்வுக்காக மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும். ஆகவே பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தகவல் வெளியிட்டுள்ளார்.