அண்மையில் செல்போன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையற்றத்தால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் போன்களின் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 28 நாட்களிலிருந்து 30 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
அதாவது வாடிக்கையாளர்களுக்கு செல்போன் ப்ரீபெய்ட் ரீஜார்ஜ் ஒரு மாத திட்டம் 28 நாட்களாகவே உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் டிராய் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சிறப்பு டாரிப் வவுச்சர், காம்போ வவுச்சர், பிளான் வவுச்சர் உள்ளிட்டவற்றில் தலா ஒரு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தினை 30 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று டிராய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ப்ரீபெய்டு ரீசார்ஜ் ஒரு ஆண்டுக்கு 12-ஆக குறைய வாய்ப்புள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.