Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வு”…. ஆள்மாறாட்டம் செய்ய முடியாது…. உயர் கல்வித்துறை அதிரடி செக்….!!!!

தமிழகத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு வரும் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தேர்வு எழுதி விடைத்தாளை கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்வில் மாணவர் அல்லாமல் வேறு யாராவது விடைகளை எழுதி ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்பு உள்ளதால் அதனை தடுக்க கல்லுாரிகள் திட்டமிட்டுள்ளன.

அதன்படி விடைத்தாள் மதிப்பீடு செய்யும்போது மாணவர்களின் எழுத்துகளில் சந்தேகம் எழுந்தால் அந்த விடைத்தாள்களைத் தனியாக எடுத்து வைத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களின் முந்தைய விடைத் தாள் கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மேலும் மாணவர்களின் செய்முறை ஏடுகள் உள்ளிட்ட நோட்டுகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |