Categories
அரசியல்

சமூக நீதிக்கான போராட்டம்…. “திமுக ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டாங்களா?”…. பாஜக பகிரங்க கேள்வி….!!!

பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் சமூக நீதிக்குரிய போராட்டத்தில் தி.மு.க சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாஜகவின் செய்தித் தொடர்பாளரான திருப்பதி நாராயணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, சமூகநீதி, வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது. இது எளிதாக கிடைக்கவில்லை. நீதிமன்றம், மக்கள்மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த பலனாக சமூகநீதி வரலாற்றில் சாதனை பெற்றிருக்கிறது.

இந்த சாதனையை எளிதில் கிடைக்கவில்லை என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆமாம் அவர் கூறுவது சரி. மக்கள் மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அத்வானி, வாஜ்பாய் போன்றோர் அமைச்சர்களாக இருந்த பாஜகவின் ஆட்சிக்காலத்தில் தான் மண்டல ஆணையம் நியமனம் செய்யப்பட்டது.

கடந்த 1989ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மண்டல ஆணையத்திற்கான பரிந்துரையை நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தது பா.ஜ.க மட்டும் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், கடந்த 1993 ஆம் வருடத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த சமயத்தில் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவால் தான் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சாத்தியப்பட்டது.

ஆகவே, இந்திய அளவில் இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றம், மக்கள்மன்றம், நீதி மன்றம் போன்றவற்றில் பாஜக தான் உறுதிப்படுத்தியது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது அ.தி.மு.க என்பது, எவராலும் எப்போதும் மறைக்கவும், மறுக்கவும் முடியாத உண்மை.

மேலும் வேறு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்று நடத்தப்பட்ட சமூகநீதிக்குரிய போராட்டத்தில் திமுக சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை தி.மு.க.வின் தலைவர் மு.க ஸ்டாலின் உணர வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |