Categories
தேசிய செய்திகள்

செம!…. 2022-23 பட்ஜெட் தாக்கலில் புதிய மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23 பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று காகிதமில்லா முறையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

கைபேசி செயலியில் பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தின் பரிந்துரைத்துள்ள படி முழுமையாக பார்வையிடலாம். ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பட்ஜெட்டில் செல்போன், கணினி உபரி பாகங்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆடியோ பொருள்கள், ஸ்மார்ட் வாட்சுகள், பேண்டுகள் உள்ளிட்ட பொருள்களின் மீதான சுங்கவரி குறைக்கப்படலாம் என்றும், அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |