சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்று பாதிப்பு மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Categories