Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தடுப்பூசி போடாதவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிரம்….!!!!

கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா  பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து, அவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியபோது, கோவையில் முதல் தவணை தடுப்பூசி 96 பேர் செலுத்தியுள்ளனர். அதனபின் 2-வது தவணை தடுப்பூசியை 82 சதவீதத்துக்கும் அதிகமானோர் போட்டுள்ளனர். இதற்கிடையில் 69,000 பேர் முதல்கட்ட தடுப்பூசியைச் செலுத்தவில்லை. இவர்களில் ஏராளமானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். ஆகவே இவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து முகாம்களுக்கு அழைத்துச் சென்றும் , நேரடியாக வீடுகளுக்குச் சென்றும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத வயதானவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் , முதல் தவணை செலுத்தி குறிப்பிட்ட நாட்களைக் கடந்த 2-வது தவணை செலுத்தி கொள்ளாதவர்களும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்..

Categories

Tech |