நடிகர் அருள்நிதியின் “தேஜாவு” திரைப்படத்தின் டீசர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் அருள்நிதி, வேறுபட்ட படக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பேர் போனவர். இவர், தற்பொழுது “தேஜாவு” என்ற படத்தில் நடித்துக் முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட் ,சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை புதுமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக கே.விஜய் பாண்டி இந்தப்படத்தை தயாரித்துள்ளார். தேஜாவு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்தத்திரைப்படத்தின் டீசர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் ரசிகர்களை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.