கடந்த ஜனவரி 23-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள பெஸ்தான் பகுதியை சேர்ந்த அலியா ஜாபர் ஷேக் என்பவர், தனது மகன் கடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வீட்டை விட்டு வெளியே வந்த தனது மகனை பர்தா அணிந்த பெண் ஒருவர் கடத்திச் சென்றதாக அலியா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் 38 வயது கர்ப்பிணிப் பெண்ணான ரூபினா சோஹன் சித்திக் மற்றும் அவரது 14 வயது மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சூரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு குழந்தைகளை கடத்தும் மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்குமோ ? என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விசாரணையில் தனது சகோதரர் சஜித் ஷேக் மற்றும் அவரது மகள் உதவியுடன் குவாட்டர்ஸில் இருந்து குழந்தையை கடத்தியதாக ரூபினா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாவ்நகரில் உள்ள ரூபினாவின் தோழி பல்கிஸ் என்பவரின் வீட்டில் குழந்தையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.