Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் கட்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளும் வகையில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு அலுவலகங்களில் அனுமதி இல்லை என்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

அந்த அடிப்படையில் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு அலுவலகங்களில் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

அவ்வாறு முழுமையாக தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் விடுப்பு அல்லது அசாதாரண விடுப்பு எடுத்துக் கொண்டால் சம்பளம் வழங்கப்படாது. இதேபோன்று தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் மருத்துவமனைகள் தவிர பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொது இடங்களுக்குச் செல்லும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |