உலக சுகாதார மையம், இனிமேல் உருமாறக்கூடிய கொரோனா வைரஸின் தன்மை எப்படி இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனா அதிகமாக பரவி வந்தாலும் அதன் தீவிரத் தன்மை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய தேவை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்ததாக கண்டுபிடிக்கப்படும் உருமாறிய தொற்றின் பரவக்கூடிய திறன் எந்த அளவில் இருக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவரான மரியா வான் கெர்க்கோவ் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, இதற்கு முன்பு இல்லாத அளவில் கொரோனா வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
எனினும், அதிகமான பாதிப்பை உண்டாக்குவது இல்லை என்பது தான் ஆறுதல் அளிக்கிறது. எனினும், இனிமேல் உருமாற்றம் அடையக் கூடிய கொரோனா இதே போன்று இருக்கும் என்று கூற முடியாது. புதிய வைரஸ் இதை விட தீவிர பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இனிமேல் கொரோனா குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்று மக்கள் கருதுகிறார்கள்.
நாம் அவ்வாறு நம்பிக்கொண்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறு தான் இருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.