தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் காலை 10 தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்த உள்ளார். கடந்த ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த தகவலை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கூட்டத்தொடரை எத்தனை நாள் நடந்தது என்பது பற்றி 6-ஆம் தேதி அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.