Categories
அரசியல்

“அவர்களுக்கு பாகிஸ்தான் தான் பிடிக்கும்!”… அகிலேஷை கடுமையாக விமர்சித்த யோகி…!!!

உத்திரபிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் எங்கள் நாட்டிற்காக உயிரை கூட தியாகம் செய்வோம் என்று கூறியிருக்கிறார்.

உத்திரபிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. மேலும், மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், எதிர்கட்சி சமாஜ்வாதிக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது.

கொரோனா காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை நடத்துவதற்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இணையதளங்களின் வழியாக அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் ட்விட்டர் பக்கத்தில் இன்று அகிலேஷ் யாதவை கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.

“அவர்கள் ஜின்னாவை வழிபடுபவர்கள். நாங்கள் சர்தார் வல்லபாய் பட்டேலை வழிபடுகிறோம்.  பாகிஸ்தான் நாடு அவர்களுக்கு பிடித்தமானது. நாங்கள், தாய் நாட்டிற்காக எங்களின் உயிரையும் தியாகம் செய்கிறோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |