கோடாக் மகிந்திரா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெபிட் கார்டு மிளம் பணம் எடுக்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 31ம் தேதியன்று அதிகாலை 1 மணி முதல் காலை 4 மணி வரை டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யவோ, அல்லது பணம் எடுக்கவோ மற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ முடியாது. இது குறித்த தகவலை வங்கி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக கோடாக் மகிந்திரா வங்கி அனுப்பியுள்ளது.
மேலும் பணம் எடுப்பது மட்டுமல்லாமல் PIN நம்பர் உருவாக்குவது, PIN நம்பரை மாற்றுவது டெபிட் கார்டை பிளாக் செய்வது, அன்பிளாக் செய்வது ஆகிய சேவைகளும் அந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது. ஆகவே வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டு குறித்த வேலைகளை முன்கூட்டி அல்லது குறிப்பிடப்பட்ட நேரத்தைத் தாண்டி மேற்கொள்ளலாம் என்று கோடாக் மகிந்திரா வங்கி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வங்கி அண்மையில்தான் தனது ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை மாற்றி இருந்தது. அதன்பின் 7 நாள் முதல் 30 நாள் வரை முதிர்வு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி 2.5 சதவீதமாக மாற்றப்பட்டது. அதேபோன்று பல்வேறு டெபாசிட்களுக்கு புதிய வட்டி விகிதம் ஜனவரி 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது போன்ற சூழலில் தற்போது டெபிட் கார்டு குறித்த அறிவிப்பை இந்த வங்கி வெளியிட்டுள்ளது. இந்த டெபிட் கார்டு பிரச்சினை நள்ளிரவில்தான் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களை பெரியளவில் பாதிக்காது என்று தெரிகிறது.