சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.