உயர்கல்வித்துறை பிப்ரவரி 1-ஆம் தேதி கல்லூரிகளில் திறக்கப்பட்டாலும் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைனில் தான் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்களின் நலன் கருதி செய்முறை தேர்வுகளுக்காக பிப்ரவரி 1-ஆம் தேதியன்று கல்லூரிகள் திறக்கப்படுகிறது. அதன்படி மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் கட்டாயம் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் view.annauniv.edu என்று இணையத்தில் இதுவரை பதிவு செய்யவில்லை எனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.