Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் (ஜன 30)…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே 30-ஆம் தேதி பணியாற்றும் ஊழியர்களுக்கு, அதற்கு பதிலாக பிப்ரவரி 26ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |