Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்..!!

சேலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று சேலம்  மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தலைமை தகவல் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா மற்றும் இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக திராவிடர்கள் விடுதலை சிறுத்தை கட்சியினர், திமுகவின் கொளத்தூர் மணி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை  திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |