Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. ஊழியர்களுக்கு 20 நாட்கள் …. கூகுள் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!!

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள் இருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இது போன்ற சலுகைகளை கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதேபோன்று விடுமுறைச் சலுகை, ஊக்கத்தொகை ஆகிய சில சலுகைகளும் ஊழியர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் ஊழியர் நலன் சார்ந்த விஷயங்களில் கூகுள் நிறுவனம் எப்போதுமே ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கான ஊதிய விடுப்பு நாட்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது புதிய அறிவிப்பின்படி இனிமேல் ஊழியர்கள் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 20 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

ஆகவே குழந்தை பிறந்தவுடன் குழந்தையை கவனித்துக்கொள்ளவும், வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடம் மற்ற தேவைகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் உதவும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான ஃபியோனா கிகோனி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் புதிதாகக் குழந்தை பிறந்த பெற்றோர்கள் 24 நாட்கள் வரை விடுப்பு எடுக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 18 நாட்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டது. இது போன்ற பல்வேறு சலுகைகளை கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது.

Categories

Tech |