Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமியின் உடலை தகனம் செய்த பெற்றோர்…. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருமங்களக்குறிச்சி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமாரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாரி அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் அவருடைய பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர்.

 

அப்போது பூமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பூமாரியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்துள்ளனர். இந்நிலையில் தற்கொலை செய்த சிறுமியின் உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் எரித்ததாக கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி கயத்தாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |