நடிகர் அஜித்தின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
ரசிகர்கள், நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக திரையில் அஜித்தை காணாமல், ரசிகர்கள் ஏங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ், மேலும் தள்ளிப்போய் இருப்பது அவர்களுக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
எனினும் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இதில், போனிகபூர் மற்றும் இயக்குனர் H.வினோத்துடன் அஜீத் மூன்றாம் தடவையாக இணைகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
🤔🤔🤔 pic.twitter.com/gW6MCYMgeY
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 27, 2022
இந்நிலையில் நடிகர் அஜித்தின் தற்போதைய புகைப்படம், இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஜெய்ப்பூரில் இருக்கும் அஜீத் கழுத்தில் மாலையுடன் நிற்கிறார்.