Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு…. இனி ரயிலில் பயணம் செய்ய இது தேவையில்லை….!!

புறநகர் ரயில்களில் பயணிக்க கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் அவசியம் இல்லை என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதோடு தமிழகத்திலுள்ள மின்சார ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தடுப்பூசி போட்ட சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் வழக்கம்போல மாஸ்க் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடை பிடிப்பது போன்ற கொரோனா நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |