Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டதை அடுத்து பல மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தற்போது 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசாங்கம் அண்மையில் புதிய ஊதிய விகிதத்தை அறிவித்தது. இதன் மூலமாக 2,25,000 ஊழியர்கள் பயன் பெறுவார்கள். அதே சமயத்தில் அரசின் கருவூலத்திற்கு ரூபாய் 6,000 கோடி பணச்சுமை ஏற்படும். இதனிடையில் பழைய ஊதிய விகிதத்தில் சில முரண்பாடுகள் உள்ளது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது சில ஊழியர்களுக்கான உரிய பலன்களைப் பெற மறுக்கும்.

ஆகவே புதிய அளவுகோலின் கீழ் புதிய ஊதிய விகிதங்கள் வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் புதிய ஊதிய விகிதத்தின் பலன்களை எந்தப் பிரிவினரும் பெற முடியாவிட்டால், இது தொடர்பான மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையில் பஞ்சாப் மாநில அரசும் தனது 1,75,000 ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக மாநில கருவூலத்தில் 2,000 கோடி ரூபாய் பணச் சுமையை ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |