கவுன்சிலிங் அறிவித்தப்படி நடைபெறததால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடைபெற்று வரும் நிலையில், கடலாடி வட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கடலாடி வட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கவுன்சிலிங் கூட்டம் காலை 9 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 8 மணி வரையிலும் நடைபெற்றவில்லை. இதனால் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறாமல் முழுவதிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கல்வி அதிகாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.