Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு” அதிரடி காட்டிய அதிமுக …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக  திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக இந்த பேரணிக்கு முழுமையாக அனுமதி அளிக்கப்படவில்லை என்று எழும்பூர் போலீசார் பேரணியில் பங்கேற்ற 8,000 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , கூட்டணி கட்சி தலைவர்கள் என 8 ஆயிரம் பேர் மீது  3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய தண்டனை கீழ் சட்டவிரோதமாக கூடுதல் பிரிவு  143 , பிரிவு 188 அரசு உத்தரவை மதிக்காதது , பிரிவு  341 அத்துமீறி நடந்து கொள்ளுதல் ஆகிய 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |