கடன் தொல்லையால் அவதிப்பட்ட மனமகிழ் மன்றத்தின் மேலாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள என்.கே.பி.ராஜூ கவுண்டர் தெருவில் வசித்து வந்த ரவிவர்மா என்பவர் கம்பம்மெட்டு சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால் ரவிவர்மா தனது இளைய மகன் சரண் கிருஷ்ணாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடன் தொல்லையால் ரவிவர்மா அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டின் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரவிவர்மாவின் உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.