Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து….!!

சாலையோர தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் சையது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காதர் மீரான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் இருக்கும் நகை கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காதர் மீரான் மோட்டார்சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர இரும்பு தடுப்பின் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த காதர் மீரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காதர் மீரானின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |