அரசு பள்ளியில் 12 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஆய்வகத்தை ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு திறந்து வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசு நிதி ஆயோக் உதவி மூலமாக 12 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆய்வகம் இம்மாவட்டத்திலேயே முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இவை பள்ளிக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு.
இதனையடுத்து இந்த ஆய்வகத்தில் இருக்கும் உபகரணங்களின் மூலமாக மாணவர்களின் அறிவியல் புதுமைகள் மற்றும் படைப்புகளை நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன் உள்ளதாக அமையும். பின்னர் பிற பள்ளி மாணவர்களும் முன் அனுமதியைப் பெற்று ஆய்வகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.