வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஏம்பவயல் கிராமத்தில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். இதனை அடுத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.மறுநாள் காலை தங்க நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.