Categories
உலக செய்திகள்

1 DAY ஆக்க்ஷன்- ”100 தீவிரவாதிகள் காலி” அதிரடி காட்டிய ஆப்கான்…!!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடந்த  24 மணி நேரம்  தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்தனர்.45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் .

உலகில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பெரிதும் உள்ள நாடு ஆப்கானிஸ்தான். இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியும் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.மக்களின் பயத்தை போக்கும் வகையில் அந்நாட்டின் அரசு தீவிரவாதிகள் மீது பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது .

இந்நிலையில் அங்குள்ள 15 மாகணங்களில் , 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ராணுவம் பல்வேறு தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர் . மேலும் 45 தீவிரவாதிகள் காயம் அடைந்துள்ளனர் .இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் அரசிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |