Categories
அரசியல்

“பாஜக அண்ணாமலை ஆடிய டபுள் கேம்”…. வெளுத்து வாங்கிய அதிமுக…. இது எப்படி வெளிச்சத்துக்கு வந்துச்சு?….!!!

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அவரது மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுகவில் இருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றார். இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவினர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.

எனவும் பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும் எதையும் துணிந்து சொல்லும் தைரியம் பாஜகவுக்கு மட்டுமே இருப்பதாகவும், அதிமுகவில் ஆண்மையோடு பேச யாருக்கும் தைரியம் இல்லை என சர்ச்சையாக பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் இந்த பேச்சால் அதிமுகவினர் கடுமையாக கொந்தளித்தனர். அதிமுக எம்எல்ஏ அருள்மொழிதேவன் உள்ளிட்ட அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் பாஜக எம்எல்ஏவின் இந்த கருத்து தங்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக இனியும் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தொடருமா என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் எனவும் கூறியிருந்தனர். இதனை அடுத்து நயினார் நாகேந்திரன் பேச்சு பாஜகவின் கருத்து அல்ல அது நயினார் நாகேந்திரன் தனிப்பட்ட கருத்து எனவும் அதற்கு பாஜக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசும்போது கைதட்டி ஆரவாரம் செய்து விட்டு தற்போது மன்னிப்பு கோருவது போல் நாடகம் போடுவதாகவும் வெளிவேஷம் போடுவதாகவும் அமைச்சர்கள் பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் அண்ணாமலையின் இத்தகைய நடிப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது தொடர்பாக அதிமுக மேலிடம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

Categories

Tech |