டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பைடன் ஒரு கை பொம்மை என்றும், அவர் அமெரிக்கர்களை முட்டாள்களை போல் நடத்துகிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிகளவு காற்று மாசுபடுவதை தவிர்ப்பதற்காக கார் நிறுவனங்களில் முன்னணியாக இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் உட்பட பல கம்பெனியை சார்ந்த தலைவர்களை அந்நாட்டின் அதிபரான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு அழைத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மின்சார வாகனங்களை அதிகளவு தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கூட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அதிபர் ஜோ பைடன் கார் தயாரிப்பில் முன்னணியாகயிருக்கும் டெஸ்லாவின் பெயரை குறிப்பிடாமல் போர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் என்ற நிறுவனங்களின் பெயரை பதிவிட்டுள்ளார்.
இதனால் கடுப்பான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் அதிபர் ஜோ பைடன் ஒரு கை பொம்மை என்றும், அவர் அமெரிக்கர்களை முட்டாள்களை போல் நடத்துகிறார் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.