துருக்கியின் கிழக்கே நிலவி வரும் உறைபனி காலநிலையால் பரிதவித்து வந்த 63 நாய்க்குட்டிகள் மீட்கப்பட்டு அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
துருக்கியின் கிழக்கே Eruzenia என்னும் மாநிலத்தில் மிகவும் கடுமையான உறைபனி காலநிலை நிலவி வருகிறது. அதன்படி அங்கு பகல் நேரத்தில் -6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவு நேரத்தில் -16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகிறது.
இந்நிலையில் இந்த உறை பனி காலநிலையில் சிக்கித்தவித்த 63 நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த நாய் குட்டிகள் அனைத்தும் சிகிச்சைக்காக அரசு கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது இதனையடுத்து சிகிச்சை பெற்ற நாய் குட்டிகள் தற்போது நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.