ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 3 ஆயிரத்து 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 188 பேர் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியாமல் மரணத்தை சந்தித்துள்ளனர். மேலும் ஜெர்மனியில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பகுதியில் 41 ஆயிரத்து 841 பேரும், பெர்லினில் 14,735 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கொரோனாவால் இதுவரை மொத்தம் 92 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 314 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் பாதிப்புக்குள்ளானவர்களில் 63.2 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்நாட்டில் மக்கள் பீதியில் உள்ளனர்.