Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களே…. இன்னும் 3 நாட்கள் மட்டுமே…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் 3 நாட்களில் வாங்கிக் கொள்ளலாம். இதுவரை 4.32 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு வாங்காமல் உள்ளனர். மேலும் நேற்றுவரை 2.11 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியுள்ளனர்.

Categories

Tech |