சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் எம்பி மகளின் திருமண விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சக எம்பி என்ற முறையில் திருமண நிகழ்வில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது விழாவில் பேசிய அவர் திமுக பேச்சாளர்கள் முன்பு நான் ஒரு ஜீரோவாக உள்ளேன். மேலும் நான் மாநிலங்களவைக்கு சென்றபோது பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். அந்த வகையில் எனக்கு பல விஷயங்களை டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கனிமொழி கற்றுக் கொடுத்துள்ளார்கள். அதேபோல் மத்திய அரசு அமைச்சருடன் ஒருமுறை சண்டை போட வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது கனிமொழி தான் என்னை சர்ச்சையில் சிக்காமல் பாதுகாத்தார் என்று பேசினார்.
இதனால் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணனின் பதவியை பறித்துள்ளனர். இதற்கு முன்னதாக இதுபோல் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது இல்லை. இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு கனிமொழி உள்ளிட்டவர்களை புகழ்ந்து பேசியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.