தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சுழற்சி முறையில் வகுப்புகள் கிடையாது. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.