இந்தியா மற்றும் சீன நாடுகளின், ராணுவ தளபதிகளுக்கான பேச்சுவார்த்தையின் 15ஆம் சுற்று விரைவாக நடக்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
சீன அரசு, கிழக்கு லடாக் போன்ற எல்லைப்பகுதிகளில் தன் படைகளை நிறுத்தி இருக்கிறது. இதனால் உண்டான பதற்றத்தை குறைக்க இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனவே, இதன் 15வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான, அரிந்தம் பாக்ச்சி, கடந்த 12ஆம் தேதி அன்று 14-ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்தவும், இரண்டு தரப்பினரும் விரைவாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.