பிரபல நடிகரான பிரசன்னா 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் கடந்த 2002-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் இவருக்கும் சினேகாவுக்கும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற படத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 2012-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விஹான் என்ற ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சினேகாவும், பிரசன்னாவும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளனர். அதாவது சினேகாவின் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தேவதை நீ! எங்கள் வாழ்க்கையை இன்னும் அழகாக்கினாய்! உனக்கு இன்னும் இதுபோன்ற பல பிறந்தநாள்கள் வர வாழ்த்துகிறேன்!” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர் பிரசன்னா, “என் தோளில் தவழும் அம்மா! என் வீட்டின் நிலவு! என் அன்பான தங்கத் தேனீ! என் டிசம்பர் மழை! என் தேன் மிட்டாய்! என் சிரிக்கும் பிரகாசம்! என் வாழ்நாள் முழுவதும் நீயே! நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்!” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவர்களுடைய இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு பெற்றோர்கள் கிடைக்க உங்கள் மகள் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளனர்.