அமெரிக்காவில் மரப்பாலம் இடிந்து விழுந்து சிறுவர்கள் 10 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் இன்று காலை நேரத்தில் அதிக பனிக் காரணமாக பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இதன் அடிபகுதியில் இருந்த இயற்கை எரிவாயு குழாய் உடைந்து, அதிலிருந்து வாயு கசிந்திருக்கிறது. மேலும் சிறுவருக்கு 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றிவிட்டு, மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பாலம் இடிந்து விழுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அப்பகுதியில் அதிபர் ஜோ பைடன் பயணம் செய்ய இருந்தார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.