குடிபோதையில் அடாவடி செய்த வட மாநில இளைஞரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு ,கொல்லம்பாளையத்தில் இன்று காலை போதையில் தள்ளாடிய வடமாநிலத்து இளைஞன் ஒருவன் இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளான் .அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை மறித்து தகராறு செய்த அவன் தட்டி கேட்டவர்களை கற்களைக் கொண்டு தாக்க முயன்றுள்ளார் .நிதானம் இழந்த அப்பகுதியினர் பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞனை பிடித்து கட்டிப் போட்டு அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .