ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக மொல்னுபிரவர் என்ற வாய்வழி தடுப்பு மருந்து பயன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1400 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரானின் தீவிரத்தை குறைத்து, உயிரிழப்பு விகிதத்தை இம்மருந்து 30% கட்டுப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், விரைவாக இம்மருந்தின் பரிசோதனை மதிப்பீடுகள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
அதே சமயத்தில், பைசர் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை 12 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் வழங்கலாம் என்று அந்நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது.