பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் ஜீவா நகரில் சந்தனமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் காயல்பட்டினத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் வேலம்மாள் விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வேலம்மாள் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலம்மாளின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.