Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இது கடவுள் கொடுத்த தண்டனை” ரயில்வே அதிகாரிக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரயில்வே அதிகாரியை கார் ஏற்றி கொலை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொம்பன்குளம் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணி காரணமாக நெல்லை கே.டி.சி. நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி செந்தாமரைக்கண்ணன் பணி முடித்துவிட்டு புளியங்குளத்தின் அருகில் வரும் பொழுது ஒரு கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த செந்தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சாலை விபத்து என வழக்கு பதிவு செய்த செய்துங்கநல்லூர் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விபத்தில் காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செந்தாமரைக்கண்ணனை ஒரு கும்பல் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் செந்தாமரைக்கண்ணனுக்கும், கொம்பன்குளம் பகுதியில் வசிக்கும் பாஸ்கர் என்பவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் பாஸ்கரின் மருமகன் சாம்ராட் என்பவர் கோவா செல்லும் போது விபத்தில் உயிரிழந்துள்ளார். இதற்காக பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது போனில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்துள்ளனர். அதற்கு செந்தாமரைக்கண்ணன் இது கடவுள் கொடுத்த தண்டனை என்று பதில் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கரின் நண்பர்களான கந்தகுமார், மகேஷ்பாபு, சுடலை மணி, ஜெகன், மார்த்தாண்டம் ஆகிய 5 பேரும் சேர்ந்து செந்தாமரைக் கண்ணனை கார் ஏற்றி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் செய்துங்கநல்லூர் காவல்துறையினர் மகேஷ்பாபு மற்றும் சுடலைமணி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |